2.எனது கல்லூரி ஆண்டுகளுக்குப் பிறகு எனது மிக முக்கியமான கண்டுபிடிப்பு Trans:
C.J
நாம் அனைவரும் ஒன்றே. நாம் நம் குடும்பங்களுடன் வாழ்கிறோம் அல்லது வேலையிலோ
அல்லது பள்ளியிலோ மற்றவர்களுடன் நேரத்தை செலவிடுகிறோம், அவர்களின் நடத்தையை எப்போதும் மிகத் துல்லியமாகக் கவனிக்கிறோம். சிலர்
எரிச்சல் உள்ளவர்கள் சிலர் தொட்டால் சிணுங்கி; மற்றவர்கள் எளிதில் தங்கள் கோபத்தை இழக்கிறார்கள். சிலர் எளிதில்
காயப்படுகிறார்கள்; மற்றவர்கள் நேர்மையற்றவர்கள், இன்னும் சிலர் தங்கள் தூண்டுதல்களுக்கு இடம் கொடுக்கிறார்கள். நாம் இவ்விஷயங்களைச்
சமாளிப்பது கடினமாக பார்கிறோம். ஒவ்வொரு முறையும் மக்கள் இந்த செயல்களைச்
செய்வதைப் பார்க்கும்போது நமக்கு எரிச்சல் ஏற்படுகிறது. பொதுவாக நாம் எதையும்
சொல்ல முடியாது, ஏனென்றால் அவர்கள் அதை தவறான நோக்கத்தில் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு
வழி இருந்தால் மட்டுமே, அவர்களின்
ஆளுமைகளில் உள்ள கறைகளைப் போக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.
ஆனால் மிகவும் விசித்திரமான ஒன்று இருக்கிறது. நாம் அடிக்கடி எரிச்சல், கோபம், கசப்பு, பொறாமை, உண்மையற்ற, மனக்கிளர்ச்சி அடைந்தால் நாம் வழக்கமாக
உற்சாகமடைவதில்லை, நம்மை நாமே குற்றம்
சாட்டுவதில்லை. ஒருவேளை நாம் இயேசு கிறிஸ்துவை நம்புகிறோம் என்பதால், இரட்சிப்பின் உறுதி நமக்கு இருக்கிறது பரலோக மகிமைக்கு போகும்
"படகில்" நாம் இருக்கிறோம் என்று உறுதியாக நம்புகிறோம். ஆனால், சாத்தான் நம்மைப் பார்த்து எப்படிச் கேலியாகச் சிரிக்கிறான் என்று நமக்கு
தெரிவதில்லை - நியாயமாகவும். நமக்குத் தெரியாமல், அவன் நம்முடைய படகை அவனுடைய கைகளில் எடுத்துக் கொண்டான், ஏனென்றால் நாம் தொடர்ந்து பாவத்தில் இருக்கிறோம்.
எழுந்திருத்தல்
ஆனால்
ஒரு நாள் நான் ஆன்மீக ரீதியில் விழித்தேன். அதற்கு முன்பு நான் எனக்குப் பொருந்தாத
எதாவது அல்லது என்னை எரிச்சலூட்டும் விதமாகச் யாராவது எதையாவது சொல்லும்போது
கோபமாக நடந்துகொள்வது எனக்குப் பழக்கமாக இருந்தது. ஆனால் நான் எதாவது தவறு செய்து
விட்டேன் என்று நான் நினைக்கவில்லை. இந்த செய்கைகள் எனது ஆளுமையின் ஒரு பகுதியாக
மாறத் தொடங்கின. நான் மாற்றப்பட்டு விட்டேன், எல்லாவற்றிற்கும் மேலாக, அது
முக்கியமான விஷயம். ஒரு நாள், சில பத்து
ஆண்டுகளுக்கு முன்பு, என் கண்கள் திறந்தன.
எரிச்சலூட்டும் குரலில் ஒருவரிடம் நான் மீண்டும் பேசியபின், நான் கசப்புடன் அழத் தொடங்கியபோது நான் உட்கார்ந்திருந்த இடத்தை இன்னும்
நினைவில் வைத்திருக்கிறேன்.
என்னை அழவைத்தது
எது? நான்
மீட்கப்படுவதற்காக இயேசு மீட்பின் விலையை எனக்காக கொடுத்தார் என்ற உண்மையை
திடீரென்று எதிர்கொண்டேன். தேவனுடைய குமாரனுடைய சாயலில் என்னை மறுபடி வடிவமைக்கும்படி
இயேசு தம் இரத்தத்தை எனக்காக சிந்தியிருந்தார். ஆட்டுக்குட்டியான இயேசுவிற்கும்
எனக்கும் உள்ள ஒற்றுமைகள் எங்கே? அவர் சாந்தகுணமுள்ளவர், சாந்தகுணமுள்ளவர்களுக்கு
பரலோகராஜ்யத்தை வாக்கு பண்ணியிருந்தார். ஆனால் நான் சாந்தகுணமுள்ளவனா? இயேசுவுடனான
எனது உறவு இறந்த ஒருவருடனான உறவு போல மாறிவிட்டது. இயேசு எனக்கு ஒரு கணித
சூத்திரமாக மாறியது போலவே இருந்தது. அவர் எனக்கான மீட்பின் விலையை செலுத்தி
விட்டார், நான் இலவசமாக
வாங்கப்பட்டேன், நான்
நியாயப்படுத்தப்பட்டுவிட்டேன் என்று நான் நிச்சயமாக நம்பினேன். ஆனால்
காலப்போக்கில் இந்த நம்பிக்கை ஒரு வெற்று சூத்திரமாக மாறியது.
என்
வாழ்க்கையில் இந்த அற்புதமான, உயிருள்ள கிறிஸ்து எங்கே இருந்தார்? அவர் இன்று
உயிருடன் இருப்பதால், அவருடைய
சீஷர்கள் நீண்ட காலத்திற்கு முன்பு செய்ததைப் போலவே நாமும் அவரை துக்கப்படுத்தலாம்.
அவர் தம் உயிரை நம்மீது உள்ள அன்பால் நமக்காக கொடுத்ததினாலும், அவர் இறைவனும் ஆனாதால் நாம் அவரை துக்கப்படுத்தக்கூடாது.
"நாம் ஒருவருக்கொருவர் அன்பு கொண்டிருந்தால், நீங்கள் என்
சீடர்கள் என்பதை எல்லா மனிதர்களும் அறிந்து கொள்வார்கள்" (ஜான் 13: 35). என்றஅவருடைய
கடைசி வேண்டுகோளை நாம் நிறைவேற்றாதபோது, எவ்வளவாய் அவரை நாம் துக்கப்படுத்தி நமது வாழ்க்கையின்
மூலம் அவருக்கு அவமானத்தை தந்தோம் என்று என்னால் பார்க்க முடிந்தது. அது என் இதயத்தில் ஆழமாகச் சென்றது. என் அண்டை
வீட்டாரிடம் எனது நடத்தை ஒரு அன்பின் உதாரணமாக அல்ல, சில சமயங்களில் அதற்கு நேர்மாறானது
இருந்தது. அன்பு மற்றவர்களுக்கு நல்ல காரியங்களைச் செய்கிறது, ஆனால் நான்
மற்றவர்களின் வாழ்க்கையை கடினமாக்கிக் கொண்டிருந்தேன். நான் கிறிஸ்துவின்
கிருபையின் மதிப்பை குறைத்து, அது மலிவான ஒன்று போல அதை லேசாக ஏற்றுக்கொண்டேன்.
ஆயினும், இயேசுவின் தியாக
மரணத்தினால், கிருபை நம்மை அதிக
விலைக்கு வாங்கினது என்பதனால் கர்த்தருக்கு நம்மை முழுமையாக ஒப்புக்கொடுப்பதன்
மூலம் மட்டுமே அத்தகைய கிருபைக்கு பதிலளிக்க முடியும். ஆனால், அவர் மிகவும்
வெறுத்ததை நாமும் வெறுக்க வேண்டும். நாம் எதை மேற்கொள்ள இவ்வளவு அதிக விலை கொடுத்தார்?
பாவத்தை. அவர் பாவத்தை மிகவும் வெறுத்தார், அதை முடிவுக்குக்
கொண்டுவருவதற்காக அவர் தன் ஜீவன் தந்தார்.
பாவத்தின் மீது
வெறுப்பு
"யாராவது
என்னிடம் வந்து .... தன் ஜீவனையும் வெறுக்கவிட்டால் எனக்கு சீஷனாய் இருக்கமாட்டான்"
என்று இயேசு சொல்லவில்லையா? (லூக்கா 14: 26) - இதன் மூலம் அவர் நம்முடைய
ஈகோ, நம்முடைய பாவமான
சுயத்தை வெறுக்க குறிப்பிடுகிறார் - நான்
என்னை ஏமாற்றிக்கொண்டிருந்தேன்! நான் இயேசுவின் சீடர் என்று நினைத்தேன், ஆனால் நான்
உண்மையில் இல்லை, ஏனென்றால்
எனக்கு பாவத்தின் மீது வெறுப்பு இல்லை. இந்த நேரத்தில், முப்பது ஆண்டுகளுக்கு
முன்னர், கடவுள்
திடீரென்று என் கண்களைத் திறந்து, பாவம் என்னவென்று பார்க்க வைத்தார். அதை வெறுக்க
வேண்டும், பாவத்திற்கு
இடமளிப்பதை பொறுத்துக்கொள்வதை விட நம் கண்களைப் பிடுங்குவது நல்லது என்று இயேசு
கூறுகிறார். தீமை மற்றும் பாவத்தை சகித்துக்கொள்வதை விட நம் கைகளை வெட்டுவது
நல்லது என்று இயேசு கூறுகிறார். பாவம் ஒரு புற்றுநோய் போல பரவுவதை இப்போது
பார்த்தேன். ஆனால் நான் அநீதி இழைக்கப்பட்டபோது என் கிளர்ச்சியையும் கோபமான
எதிர்வினைகளையும் நான் பாவமாக பதிவு செய்யவில்லை. திடீரென்று மற்ற நிகழ்வுகளிலும் அதே
போல் இருப்பதைக் கண்டேன். உதாரணமாக, ஒய்வு நாளை புனிதமாக வைத்திருக்க நான் எதையும் செய்ய
முயற்சிக்கவில்லை. இயேசு சொன்னார், "நீங்கள் என்னை நேசித்தால், என் கட்டளைகளைக்
கடைப்பிடிப்பீர்கள்" (யோவான் 14: 15). அவருடைய கட்டளைகள், முதலில், பத்து
கட்டளைகளாக இருந்தன, அவற்றின்
நோக்கம் மிகவும் விரிவானது என்பதை அவர் மலைப்பிரசங்கத்தில் மிகவும் ஆழமான
அர்த்தத்துடன் விளக்கினார். இயேசுவுக்கு மிக நெருக்கமான சீடர் எழுதியதை நான்
படிக்கவில்லையா? "நான் அவரை
அறிவேன் என்று சொல்லியும் அவருடைய கற்பனைகளைக் கைகொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான். உண்மை
அவனிடத்தில் இல்லை "1 யோவான் 2: 4).
எனவே நான் ஒரு
பொய்யன். நான் இயேசுவை நம்புகிறேன் என்று சொன்னாலும், நான் தேவனுடைய ராஜ்யத்திற்கு
வெளியே இருந்தேன் (கலா. 5: 19-21). அதாவது, அத்தகைய மக்கள் நித்தியத்தில்
பரலோகராஜ்யத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். சாத்தானால் பிணைக்கப்பட்டு, மன்னிக்க
விரும்பாததால் அவனுடைய ராஜ்யத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்ட இரக்கமற்ற
வேலைக்காரனின் உவமையில் தவறாக கருத முடியாத தெளிவுடன் இயேசு அதையே கூறுகிறார் (மத்
18: 32).
மீட்பு இருந்தும் மீட்கப்படாதவன்
என் விசுவாச வாழ்க்கையில் ஏதோ தவறு இருப்பதாக இப்போது
என்னால் காண முடிந்தது. இயேசுவின் பலியைப் பற்றி நிச்சயமாக நான் அறிந்திருந்தேன்.
நாம் "வாழ்க்கையின் புதிய நிலையில் நடக்க" கடவுளின் ஆட்டுக்குட்டியாக
அவர் நம்மை மீட்டெடுத்தார். ஆனால் அது வெறும் அறிவு மட்டுமே. வங்கியில் பணம்
வைத்திருந்தும் நாம் சென்று அதைக் கோரவில்லை என்றால், எந்த நன்மையும் இல்லை.
இயேசுவின் தியாகம் மற்றும் இரத்தத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்வதிலும் எந்த
நன்மையும் இல்லை, நாம் உரிமை கோராவிட்டால். ஆகவே எனக்கு வழங்கப்பட்ட பெரிய அருள்
"இறந்த மூலதனம்" ஆகவே இருந்தது. இயேசுவின் தியாகத்தைப் பற்றிய அறிவு
நம்மை புதிய மனிதர்களாக ஆக்குவதில்லை என்பதை அப்போது நான் உணர்ந்தேன். விசுவாசப்
போரில் செயல்படும் உயிருள்ள நம்பிக்கை மட்டுமே இதைச் செய்ய முடியும். பரிசுத்த
வேதாகமம் கூறுகிறது, "விசுவாசத்தின் நல்ல போராட்டத்தை போராடு; நித்திய ஜீவனைப் பற்றிக்
கொள்" (1 தீமோ. 6: 12). நான் ஏதாவது ஒன்றைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்றால், நானே ஏதாவது
செய்ய வேண்டும். நான் போராட வேண்டுமானால், நான் ஒரு முழுமையான
முயற்சியை மேற்கொள்ள வேண்டும். நான் இந்த முயற்சி செய்யவில்லை. அப்போஸ்தலன் பேதுரு
விசுவாசிகளுக்கு எழுதினார்-"எதிராளியாகிய, பிசாசு, கர்ஜிக்கிற
சிங்கத்தைப் போல எவனை விழுங்கலாமென்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான்" (1
பேதுரு 5: 8). இந்த உண்மையின் உண்மையை நான் கணக்கிடவில்லை. எனது "ஆன்மீக
சான்றுகளை" - ஞானஸ்நானம் பெறுவது, மாற்றப்படுவது அல்லது ஆவியால் நிரப்பப்படுவது
போன்றவற்றைக் - காட்ட முடிந்தாலும், நான் ஆபத்தில் இருக்கிறேன் என்று அர்த்தம்: எனக்கு
எப்போதும் ஒரு எதிரி என் குதிகால் மீது இருக்கிறான், என்னை எதிர்த்துப் போராடி
கீழே விழப்பண்ண தயாராக இருக்கிறான். அவன் என்னை தனது இரையாக்க விரும்புகிறான்.
எதிரி என்னை அச்சுறுத்துவது மட்டுமல்லாமல், ஏற்கனவே போராடத்
தொடங்கியிருந்தால், நான் ஆயுதங்களை
நானே பிடித்துக்கொண்டு போர்க்களத்திற்குள் நுழையாவிட்டால் நான் தொலைந்து போவேன்.
ஆகவே, நாம் விசுவாசப்
போரை எதிர்த்துப் போராட விரும்புகிறோமா இல்லையா என்பது நம்முடைய ஆடம்பரத்திற்கு
விடப்படவில்லை, ஆனால் அது
முழுமையான அவசியமான விஷயம். இல்லையெனில் நாம் மீளமுடியாமல் தொலைந்து போகிறோம்.
நிச்சயமாக, நாம் எதிரியின்
இரையாகிவிடுவோம் என்பதில் நமக்கு அக்கறை இல்லை என்றால் ஒழிய நாம் செயலற்றவர்களாக எதையும்
செய்யாமல் இருக்க முடியும்.
இந்த உண்மையில், நான் ஆகாயத்தில்
கோட்டைகளைக் கட்டிக்கொண்டிருக்கிறேன் என்பதை இப்போது உணர்ந்தேன், ஏனென்றால்
பரிசுத்த வேதாகமத்தில் இயேசுவும் அப்போஸ்தலர்களும் இவ்வளவு தெளிவாக சொன்னதை நான்
பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனவே என் வாழ்க்கையில் எந்த வெற்றியும் இல்லை
என்பதில் ஆச்சரியமில்லை. பரிசுத்த வேதாகமத்தில் ஊடுருவியுள்ள பாவத்திற்கு எதிராகப்
போராடுவதற்கான அழைப்பின் மூலம் நாம் வெற்றி மாலை அணிய முடியும். வெளிப்படுத்துதல்
புத்தகத்தில் இயேசு தேவாலயங்களுக்கு, "ஜெயம் கொள்ளுகிறவன் எல்லாவற்றையும்
சுதந்தரித்துக் கொள்ளுவான்" (வெளி. 21: 7 ஏ.வி.) என்று சொல்கிறார்.
மகிழ்ச்சியில்லாமைக்கான
காரணம்
அதனால்தான், அந்த நேரத்தில், மீட்பின்
அதிசயத்தைப் பற்றி நான் மகிழ்ச்சியடையவில்லை, மற்றவர்கள் என்னில்
இயேசுவின் மகிழ்ச்சியைக் காண முடியவில்லை என்பதில் ஆச்சரியமில்லை. நான்
மகிழ்ச்சியாக இல்லை என்பதில் ஆச்சரியமில்லை. நான் இயேசு கிறிஸ்துவின் வழி அல்லாத தவறான
பாதையை, என்னை ஒருபோதும்
இலக்கை நோக்கி கொண்டு செல்ல முடியாத, மலிவான கிருபையின் பாதையை எடுத்துக்கொண்டேன். நாம் போரிடாவிட்டால், முடிசூட்டப்பட
மாட்டோம். கர்த்தர் நம்மிடம் என்னவிதமான போரை கோருகிறார்! எபிரேயர்களுக்கு எழுதிய
கடிதம் நமக்குக் கூறுவது போல, இரத்தம் சிந்தும் அளவிற்கு இது ஒரு போர் (எபிரேயர்12:
4).
இருப்பினும், ஒவ்வொரு நாளும்
என் குறிப்பிட்ட பாவ அடிமைத்தனங்களுக்கு எதிராக நான் விசுவாச பிரார்த்தனைகளுடன்
நடவடிக்கை எடுக்கவில்லை. இயேசுவை அவமானப்படுத்திய, நான் இந்த பூமிக்கும்
சாத்தானுக்கும் பிணைக்கும் என் பாவ குணங்களுக்கு எதிராக நான் போராடவில்லை. என்
கண்களைப் பறிக்கச் சொன்ன இயேசுவின் கட்டளையை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பாவங்களின் காரணங்களுக்கு எதிராக நான் ஒரு சமரசமற்ற
போராட்டத்தை எடுத்திருக்க வேண்டும். நம்மீது உள்ள தீமைக்கு இடமளிக்கும் எல்லாவற்றின்
மேல் எனக்கு அத்தகைய வெறுப்பு இருந்திருக்க வேண்டும் - அது கொல்லப்படும் வரை நான்
ஓய்வெடுக்க மாட்டேன் என்று. இப்போது, திடீரென்று, என் செயலற்ற தன்மை எவ்வளவு
இயற்கைக்கு மாறானது என்பதை உணர்ந்தேன். ஒரு நபர் தனக்கு புற்றுநோய் இருப்பதைக்
கண்டறிந்த தருணம், அவர் தனது
வேலையையும் குடும்பத்தினரையும் விட்டுவிட்டு, ஒரு அறுவை சிகிச்சைக்கு
உட்படுகிறார், அநேகமாக அதற்காக
பெரும் பணத்தை செலவழிக்கிறார். அத்தகைய புற்றுநோய் வளர்ச்சியால் அவருக்கு சரீர
மரணம் மட்டுமே ஏற்படுத்த முடியும்
என்றாலும், அவர் மீட்க
எல்லா முயற்சிகளையும் செய்கிறார்.
பாவம் ஒரு
புற்றுநோய்
தீங்கு
விளைவிக்கும் புற்றுநோய் பாவத்தின் இனம் என்ன! பாவம் பயங்கரமான ஒன்று. வேதம் இதை
நமக்குக் கூறுகிறது, மேலும் வாழ்க்கையின்
யதார்த்தமும் அதைச் சொல்கிறது. இது நம் வாழ்வில் பரவலாக உள்ளது; இது நம்
முகங்களிலும் நம் நடத்தையிலும் ஒரு முத்திரையை உருவாக்கி நமது ஆளுமையை அழிக்கிறது.
இது கடவுளிடமும் மனிதனிடமும் நம்மை குற்றவாளியாக்குகிறது. இது நம்மையும்
மற்றவர்களையும் மகிழ்ச்சி இல்லாமல் ஆக்குகிறது. பாவம் ஒரு பயங்கரமான இடத்திற்கு
நம்மை நித்தியத்தில் அழைத்துச் செல்லும். அது தீமைக்கும் இருளுக்கும் ஒத்திருக்கும்
இடம். அது திகில் மற்றும் வேதனையுள்ள இருளின்
ராஜ்யம் என்று இயேசு அதிகமாய்
பேசியிருக்கிறார்.
ஆமாம், பாவம் ஒரு விஷம், இது நமக்கு
மரணத்தையும், நித்திய
மரணத்தையும், ஒரு பயங்கரமான
இறப்பையும் தரும். அதனால்தான் இயேசு தம்முடைய சீஷர்களிடம், "ஆத்துமாவைக்
கொல்ல வல்லவர்களாயிராமல் சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள்
பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும்
நரகத்தில் அழிக்கக்கூடியவருக்கே பயப்படுங்கள்" (மத் 10: 28). இந்த பயம் என்
இதயத்தில் ஆழமாகப் போகவில்லை. இந்த உண்மையை நான் அறிந்திருந்தேன், ஆனால் அது என்
வாழ்க்கையை தீவிரமாக மாற்றவில்லை.
உண்மையில் என்
இதயத்தில் எதிர் மனப்பான்மை இருந்தது. பாவத்தின் ஆன்மீக நோய்களை விட என் உடல் நோயை
நான் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டேன், அது உண்மையில் ஆபத்தானது.
நான் சுதந்திரமாகவும் குணமாகவும் இருக்கப் பாவத்திற்கு எதிராக தீவிரமான பிரச்சாரத்தை
மேற்கொள்ளவில்லை. "உங்கள் பாவங்களை
ஒருவருக்கொருவர் ஒப்புக்கொள்ளுங்கள்" (யாக். 5: 16) என்று பரிசுத்த வேதாகமம் சொல்வது
படி நான் கத்தியை வைத்து வெட்டி என் பாவத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வரவும் அதை
ஒப்புக்கொள்ளவும் நான் அனுமதிக்கவில்லை. நான் ஒப்புக் கொள்ளாத பல விஷயங்கள்
இருந்தன, ஏனென்றால் அது
எனக்கு பாதிப்பதை கொடுத்திருக்கும் - அது என் பெருமையை காயப்படுத்தியிருக்கும்.
நான் பாவத்தை விட்டு விடவில்லை. உதாரணமாக, நான் வேறொரு நபருடன் தவறான தொடர்பு
கொண்டிருந்தபோது, அவளைத்
தவிர்க்க நான் முயற்சிக்கவில்லை. என்றாலும், நான் உடல்நிலை சரியில்லாமல்
இருந்தால், நான்
மருத்துவமனைக்குச் சென்று என் அன்புக்குரியவர்களிடமிருந்து விலகிச் செல்ல வேண்டும்
என்று நான் கருதுகிறேன். அல்லது, இதேபோல், நான் ஒருவருடன் முரண்பட்டபோது, நான் அவருடன்
சென்று சமரசம் செய்யவில்லை, ஏனென்றால் அது என் பெருமைக்கு அதிக பாதிப்பை
செய்திருக்கும்.
பாவத்துடன் அனுதாபம்.
எனக்கு பைபிளைப்
பற்றி அதிகம் தெரிந்திருந்தாலும், பைபிளில் உள்ள அனைத்தும் ஒரு விஷயத்தில் அக்கறை
கொண்டுள்ளது என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை: பாவத்திடம் வெறுப்பு. அந்த
காரணத்திற்காக மட்டுமே கிறிஸ்துவின் மீட்பிற்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம்
உண்டு. பாவம் இருளில் தொடர்ந்து வாழ அனுமதித்து, அதை ஒப்புக்கொண்டு
வெளிச்சத்திற்கு கொண்டு வராத வரை, நான் அதைப் பொறுத்துக்கொண்டு அது பரவக்கூடும் அளவிற்கு
அதை வளர்த்தேன். இருளின் ஆண்டனான சாத்தான் என்மீது உரிமை கோரினான்.
ஆகவே, பாவத்திற்கு
எதிரான வெறுப்பில் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு பதிலாக, எனக்கு சுய பரிதாபம் மற்றும்
என் பாவத்திற்கான சாக்கு போக்கு வார்த்தைகள் இருந்தன. நான் என்னைப் பற்றி
வருந்தினேன், ஏனென்றால்
மக்கள் எனக்கு வாழ்க்கையை மிகவும் கடினமாக்கினார்கள். என் கசப்பை மன்னிக்க
முயற்சித்தேன். இந்த அணுகுமுறை என் பாவம் வலுவாக வளரவும் ஆழமான வேர்களை எடுக்கவும்
விடுவதை நான் கவனிக்கவில்லை. எனது குறிக்கோள், "என் பாவத்திற்கு
மரணம்! வெளிச்சத்திற்குள்!" ஆனால் அதற்கு பதிலாக நான் அதை மென்மையாகக் கையாண்டு
அதனுடன் நெருக்கமாக இருந்ததினால் அது
தொடர்ந்து வாழ்ந்தது.
இயேசுவை என்
மீட்பர் என்று ஒப்புக்கொண்ட போதும் அந்த நேரத்தில் நான் எங்கே நின்றேன்? நான் அவருக்கே
உரியவன் என்று நினைத்தேன். நான் அவரை ஏறக்குறைய இழந்துவிட்டேன் ஏனென்றால் நான்
அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்பதால் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்க
முடியவில்லை. நான் அவரிடமிருந்து வெகு தொலைவில் இருந்தேன்.
இரட்சிக்கபட்டது
- நல்லது?
நாம்
இரட்சிக்கப்படுகிறோம் என்பதில் உறுதியாக இருக்க முடியுமா? ஆமாம், நம்மால்
முடியும், ஆனால் மலிவான
கிருபையின் முன்நிபந்தனையுடன் அல்ல. அது எனக்கு தெளிவாகியது. ஒவ்வொரு பாவியும், அவர் எவ்வளவு
மோசமானவராக இருந்தாலும், இரட்சிப்பின் உறுதி இருக்க முடியும்.
ஆனால் அவர் ஒரு
பாவி என்ற உண்மையை அவர் உறுதியாக ஒப்புக் கொள்ள வேண்டும். தவறு செய்தததற்கு
நெஞ்சறிந்து மனம் வருந்துதல் வேண்டும், அவர் செய்த பாவங்களைப் பற்றிய வருத்தம்
வேண்டும். நான் ஒரு புற்றுநோயால் பாதிக்கப்படுவதைப் போல என் பாவ நோய்க்கு நான்
வருத்தப்படுகிறேன் என்றால், இவ்வளவு வேதனையை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.
இந்த வேதனையையும், என்னை மிகவும்
மகிழ்ச்சிஇல்லாமல் செய்யும் பாவத்தையும் போக்க நான் எதையும் செய்வேன். இது
சாத்தியமாகும். இயேசுவின் இரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது. கல்வாரியில் அவரது
தியாகம் நடந்தது, நான் அதை கோர
முடியும். அவர், "முடிந்தது!"
என்று அறிவித்தார். நான் அதில் அவரைப்
பிடித்துக்கொள்ள முடியும். அவர் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார்; நான் அதை ஏற்க
வேண்டும். நான் அதை நிறைவேற்ற வேண்டியதில்லை; அவர் எல்லாவற்றையும் செய்து
விட்டார். அவர் ஏற்கனவே என்னை மீட்டுக்கொண்டார்-ஆனால் நான் அவருடைய வெற்றியைக் கோர
வேண்டும்.
நான் ஒரு பாவி, என் வாழ்நாள்
முழுவதும் ஒரு பாவியாக இருப்பேன் என்ற உண்மை, என் இரட்சிப்பின் நம்பிக்கையை
மீற முடியாது. மாறாக, இந்த உண்மையை
நான் முழுமையாக உணர்ந்தால், இரட்சிப்பின் நம்பிக்கையை எனது விசுவாசத்தின் வெற்று
சூத்திரமாக மாறாமல் இருக்கும். அவருடைய மன்னிப்பு பற்றிய மகிழ்ச்சியான அறிவும், என்
இரட்சிப்பின் நம்பிக்கையும் எப்போதும் என் இதயத்தில் புதியதாக இருக்கும்.
அந்த வகையில்
நான் சிலுவையின் அடிவாரத்தில் அமர்ந்து, பிழை உணர்ந்து மனம் வருந்தும்
இருதயத்துடன், கிருபையை கேட்க
முடியும். பின்னர், சிலுவையில் இருந்த
திருடனைப் போலவே, சொர்க்கமும்
எனக்கு திறந்திருக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளில், இந்த திருப்புமுனைக்கு
முன்பு, நான் இதை
செய்வதை நிறுத்திவிட்டேன். நான் என் பாவத்தைப் குறித்து அழவில்லை; எனக்கு ஒரு மனம்
வருந்தும் இதயம் இல்லை. நான் கிருபையைச் சார்ந்து இல்லை. அதனால்தான் நான்
நன்றியுணர்வாலும் கிருபையை புகழ்வதாலும் நிரப்பப்படவில்லை. ஏனென்றால், நான் மீட்பின்
பலனைக் கொடுக்காத மலிவான கிருபையிலே வாழ்ந்து வந்தேன். இயேசுவை மேலும் மேலும் பிரதிபலிக்க முடிந்த மிகுந்த
மகிழ்ச்சியும் இல்லை.
நமது பரம்பரை
பாவங்களிலும், உடைக்கப்படாத
தன்மையிலும், வருத்தப்படாமல்
இருப்பது பயங்கரமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பது தெளிவாகத் தெரிந்தது.
நீட்சே: "நான் ஒரு மீட்பரை நம்புகிறேன் எனில், கிறிஸ்தவர்கள் இன்னும் அதிகம்
மீட்கப்பட்டவர்களாக காணப்பட வேண்டும்." என்று தன்னை தற்காத்துக் கொள்ள
முடியும். இயேசுவைத் துறந்து அவருக்கு எதிராக எழுந்த எண்ணற்ற பிற மக்கள், நீட்சேவின்
முன்மாதிரியைப் பின்பற்றி, கிறிஸ்தவர்கள் மீட்கப்படாதவர்களாக இருக்கிறார்கள் என்ற
உண்மையை மேற்கோள் காட்டி தங்களைத் தற்காத்துக் கொண்டனர். இந்த நாளில் என் கண்கள்
திறக்கப்பட்டன, பாவத்தைப்
பற்றிய எனது அணுகுமுறை எவ்வளவு தவறானது என்பதை என்னால் காண முடிந்தது. விவிலிய
சத்தியங்கள் அனைத்தும் என்னை எதிர்கொண்டது மட்டுமல்லாமல், அவை என் இதயத்தில் ஆழமாக
மூழ்கி என் மனசாட்சியைத் தாக்கின. கடவுளிடமும் மனிதனிடமும் என் குற்றத்தை எவ்வளவு
லேசாக எடுத்துக்கொண்டேன் என்பதை வருத்தத்தில் உணர்ந்தேன். இயேசு தன் ஜீவனை கொடுக்க வேண்டி இருந்த பாவத்தை நான் வெறுக்க
ஆரம்பித்தேன், அது. இது மிகவும்
பயங்கரமான ஒன்று, இது தனிநபரின்
வாழ்க்கை மற்றும் குடும்பம் அல்லது சமூகம் இரண்டையும் அழிக்கிறது. ஆம், அது நம்மை
சாத்தானுடன் பிணைக்கிறது.
வாழ்க்கையின்
கருத்து - வாழ்க்கையின் – திருப்பு முனை
இந்த நாள் என்
வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை எனக்குக் கொண்டு வந்தது. நான் என் பாவத்தை முன்பை
விட தீவிரமாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தேன். ஏனென்றால், அது இருட்டில் இருந்த வரை, மனித
கண்களிலிருந்தும் என்னிலும் இருந்து மறைக்கப்பட்டு, இறுதியில் அதை எதிர்கொள்ளவும்
விரும்பாததால், அது தொடர்ந்து
பரவக்கூடும் என்பதை என்னால் தெளிவாகக் காண முடிந்தது. நான் அதை வெளிச்சத்திற்கு
கொண்டு வந்தேன், ஏனென்றால் ஒளி,
எதிரியை வெளிப்படையாக காண்பிக்கும் என்பதை நான் அறிவேன். எதையாவது
வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது என்பது கடவுளுக்கும் மனிதனுக்கும் முன்பாக
ஒப்புக்கொள்வதாகும். எனவே நான் ஒருவரிடம் சென்று என் பாவம் என்ன என்று அவரிடம்
சொன்னேன். நான் பாவத்தின் பெயரைச்சொல்லி சொன்னேன். நான் அதை மீண்டும் இயேசுவிடம்
கொண்டு வந்து, பாவத்தை ஒப்புக்கொண்டு
அதை துறந்துவிட ஒத்துக்கொண்டேன். இந்த ஒப்புகொள்ளுதல் இல்லாமல் நான் சுதந்திரமாக
இருக்க முடியாது என்று எனக்குத் தெரியும்; இந்த
மறைக்கப்பட்ட பாவத்தால் எதிரி என்னை தொடர்ந்து தன் கையில் வைத்திருப்பான்.
இப்போது பாவம்
அதன் உண்மையான அர்த்தத்தை என்னிடத்தில் ஏற்படுத்தினதினால், பாவம் முக்கியமான விஷயம் அல்ல, மாறாக பாவத்திடம்
எனக்குள்ள அணுகுமுறை தான் என்பதை நான் உணர்ந்தேன். நான் அதை என் மனதில், அலட்சியத்தினால்
அல்லது ஊக்கமின்மையால் வைத்திருந்தால், என் பாவத்தைப் பயன்படுத்துவதற்கும் அதை
நரகத்தின் கனியாக மாற்றுவதற்கும் சாத்தானுக்கு வாய்ப்பையும் உரிமையையும்
தருகிறேன். ஆனால் நான் என் பாவத்தை இயேசுவிடம் கொண்டு வந்து, அதை மனிதர்களிடமும்
ஒப்புக்கொண்டால், என் பாவம் இயேசுவின் இரத்தத்தில் அழிக்கப்பட்டிருப்பதைக் காண்பேன். விசுவாச ஜெபத்தில்
நான் இயேசுவின் பலியை மீண்டும் மீண்டும் கோரினால், "பாவம் அதிகரித்த
இடத்தில், கிருபை மேலும்
பெருகியது" (ரோமர் 5: 20). என்று காண்கிறேன்.
அடுத்த படி
இருப்பினும், ஒப்புக்கொள்ளுதல்
மற்றும் பாவத்திற்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுப்பது மட்டும் நான் செய்ய
வேண்டியதல்ல. இப்போது நான் வார்த்தையினாலோ செயலினாலோ பாவம் இழைத்த குறிப்பிட்ட
நபர்களிடம் செல்ல வேண்டியிருந்தது. இயேசுவின் மன்னிப்புக்காக நன்றி
செலுத்துவதாலும், மற்றவர்களுக்கு
நான் செய்ததைப் பற்றிய வருத்தத்தாலும், நான் ஒருபோதும் "திருத்தங்களைச்
செய்ய" முடியாது என்றாலும், நான் அவர்களுக்குக் கொடுத்த காயங்களைக் குணப்படுத்த
என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பாவச் செயல்
இப்போது ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் மூலம் அழிக்கப்பட்டது. நான் இனி அதைப்
பற்றி நம்பிக்கையற்றவனாக இருக்க தேவையில்லை; நான் இனி என் மீது குற்றம்
சாட்டத் தேவையில்லை, நான் இனிமேல் கீழ்த்தர இன்பத்தில்
கிடந்து மகிழத் தேவையில்லை. ஆனால் பாவச் செயல் - அது வார்த்தையிலோ செயலிலோ சரி -
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலேயே அழிக்கப்பட்டது என்று நான் உண்மையிலேயே
நம்பினாலும், இந்த பாவத்தின்
வேர், அதாவது பாவப்
பண்பு இன்னும் என்னுள் இருக்கிறது என்பதையும் அறிந்தேன். . இதை என்னால் உணர
முடிந்தது. என் பாவத்தின் மீது இயேசுவின் வெற்றியைப் பறைசாற்றும் விசுவாசப்
போர்களில் நான் இப்போது போராட வேண்டியிருந்தது என்பதை நான் அறிவேன்.
ஆட்டுக்குட்டியின் இரத்தத்திற்கு பாவத்தை மன்னிப்பது மட்டுமல்ல, என்னை
விடுவிக்கவும், என் தனித்தன்மை
மற்றும் மனநிலையில் மிகவும் ஆழமாக இருக்கும் இந்த பாவ குணத்திலிருந்து என்னை
தூய்மைப்படுத்தவும் சக்தி இருக்கிறது.
விசுவாசத்தின்
தினசரி போர்
இது தீவிரமான மற்றும்
விடாமுயற்சியுடன் போராடும் ஒரு விஷயம். எனவே நான் இந்த விசுவாசப் போரை, தினமும் போராடினேன்.
தினமும் நான் என் பாவங்களை பெயர் சொல்லி இயேசுவிடம் கொண்டு வந்தேன். ஒவ்வொரு
நாளும் நான் அவருடைய பெயரைச் சொல்லி, வெற்றியின் வழிபாட்டு பிரார்த்தனை செய்வதற்கு
குறைந்தது பதினைந்து நிமிடங்கள் எடுத்தேன்:
"இயேசுவின் நாமத்திலும்
அவருடைய காயங்களிலும் வெற்றி இருக்கிறது.
இயேசு தனது காலடியில்
சர்ப்பத்தின் தலையை மிதித்துவிட்டார்.
ஹல்லேலூயா! ஆமென்.
நான் விடுதலை அடைகிறேன் ..........
" ஒவ்வொரு முறையும் நான் என் பாவத்தின்
பெயர் சொல்லி நிரப்பினேன்.
வெற்றியின் வசனங்களை நான்
பாடினேன்:
இந்த நாள் அவர் புகழ்
சத்தமாக ஒலிக்கட்டும்,
இயேசுவின் நாமம் உடைக்க
சக்தி வாய்ந்தது
நம்மைப் பிணைக்கும் பாவத்தின்
பயமுறுத்தும் சங்கிலிகளை *
*இந்த பாடல் மற்றும் இந்த புத்தகத்தில் உள்ள மற்ற பாடல்கள் தாய்
பசிலியாவின் பாடல் புத்தகமான வெல்-ஸ்பிரிங் ஆஃப் ஜாயிலிருந்து எடுக்கப்பட்டது.
அவருடைய விலைமதிப்பற்ற
இரத்தத்தை நான் புகழ்ந்தேன், ஏனென்றால் ஏதாவது பின்னர் நடக்கும் என்று எனக்குத்
தெரியும். உருவகமாக, என் பாவ
நோய்களுக்கு ஆட்டுக்குட்டியின் இரத்தமே சிறந்த மருந்து. அதைத் தீண்டாமல் விட்டுவிட
என்னால் முடியாது. இயேசுவின் இரத்தத்தை நாம் புகழும்போது, சாத்தான் சரணடைவான். அவனும்
அவனது பேய்களும் நம் வாழ்வில் குறிப்பிட்ட பாவங்களுக்குப் பின்னால் நிற்கிறார்கள்.
வெற்றி அடைந்த இயேசுவின் தியாகத்தையும், "இது முடிந்தது!", என்ற அவருடைய வார்த்தையையும்,
உருமாற்றும் அவருடைய இரத்தத்தின் வல்லமையையும் நம்புவது எனக்கு ஒரு பெரிய
கிருபையாக மாறியுள்ளது. அவருடைய தியாகத்தையும், அவருடைய இரத்தத்தையும் மகிமைப்படுத்தி, விசுவாசத்தில்
இந்த வெற்றியை நாம் கோரினால், நாம் உருமாற்றப்படுவோம்.
உம் விலைமதிப்பற்ற
இரத்தத்திற்கு இவ்வளவு பெரிய வலிமை உள்ளது,
இது சாத்தானின் மிகவும் இறுக்கமான
பிடியிலிருந்து காப்பாற்றுகிறது.
சாத்தானின் பிடியிலிருந்தும்
கொடுங்கோன்மையிலிருந்தும்
என்னை விடுவிக்கும் உம்
இரத்தத்தை நான் புகழ்கிறேன.
W.J. 184
"ஆகவே, குமாரன் உங்களை
விடுதலை ஆக்கினால், நீங்கள்
உண்மையிலேயே சுதந்திரமாக இருப்பீர்கள்" (யோவான் 8: 36) என்று அவருடைய
வார்த்தையின்படி, ஆண்டவர்
பலவிதமான பாவ அடிமைத்தனங்களிலிருந்து என்னை எவ்வாறு விடுவித்தார் என்பதை நான்
உண்மையாக அனுபவித்தேன். இவை வெற்று வார்த்தைகள் அல்ல என்பதை நான் கண்டுபிடித்தேன்.
அத்தகைய விசுவாசப் போரின் மூலம் நாம் உண்மையில் நம் சங்கிலிகளிலிருந்து
விடுவிக்கப்படலாம். இயேசு தன்னை மீட்பர் என்று அழைக்கிறார். ஆகவே, நம்முடைய பாவச்
சங்கிலிகளிலிருந்து நம்மை விடுவிக்காமல் அவரால் இருக்க முடியாது. அவர் பெயர் ஆம் என்றும்
ஆமென் என்றும் இருக்கிறது. அவர் பெயருக்கு
ஏற்ப செயல்படுவார். நம்மை மீட்பது அவருடைய ஊழியம். இந்த அறிவு எனக்கு மிகுந்த
மகிழ்ச்சியை அளித்தது. அவருடைய மீட்பின் சக்திக்கு பலனளிக்காத எந்த பாவமும் இல்லை.
நாம் பூமியில் இருக்கும் வரை பலவீனமான, பாவமுள்ள மக்களாக இருந்தாலும் கூட, நாம் அநேகம்தரம்
உண்மையில்லாதவர்களாக, மீண்டும்
மீண்டும் நம் பாவ இச்சைகளுக்கு அடிபணிந்து- பொறாமை, காயம், சண்டை போன்ற-பாவமான
அடிமைத்தனம் எதுவாக இருந்தாலும், நாம் அதிலிருந்து விடுபடலாம்.
ஆமாம், அனைத்து
பாவங்கள் மற்றும் எதிரியின் சக்திகளின் மீதும் வெற்றி பெற்றவர் நம் பக்கத்தில்
போராடுவதால், போர் எவ்வளவு
காலம் நீடித்தாலும் இறுதி வெற்றி நிச்சயமாக நம்முடையதாகவே இருக்கும். நாம் அவமானப்படுத்தப்படுவதிலிருந்து வெட்கப்படாமல்
விசுவாசத்தில் நிலைத்திருக்கும் வரைக்கும், நாம் எவ்வளவு இறுக்கமாக
பிணைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணரும் போது தோற்றுப் போன நீண்ட தொடர் போர்கள்
இருக்கலாம், ஆனால் ஒருபோதும்
தோற்றுப் போன யுத்தம் இருக்காது,
நம்பிக்கையின்
நெருக்கடிகள்
சில
பாவங்களுக்கு எதிரான விசுவாசப் போரை நாம் எடுக்கத் தொடங்கும் போது, அது
எல்லாவற்றையும் விட மோசமாகத் தோன்றுகிறது. ஒரு வலிமையான வெற்றி, நமக்கு ஒரு விடுதலை தரும்
என்று அறிந்த எதிரி, பொங்கி எழுந்து நம்மீது தன் பிடியைத் தக்கவைத்துக் கொள்ள எல்லா
முயற்சிகளையும் மேற்கொள்கிறான் என்ற அறிவில் தொடர்ந்து போராடுவதும், ஒரு விஷயம. இந்த
போரிலிருந்து வெட்கப்படாமல் ஆனால் பொறுமையாக, அவமானங்களின் நீண்ட பாதையை செல்லும்
எவரும் வெற்றி பெற்ற இயேசு கிறிஸ்துவின் மீட்பின் சக்தியை அனுபவிப்பார். அதற்கு
நான் சாட்சி கொடுக்க முடியும்.
இயேசுவின் நிபந்தனையற்ற வெற்றியைப்
பற்றி அறிந்தது, நான் மிகவும் கடினமான போரில் இருந்தபோது, என் இதயத்தில் மிகுந்த
மகிழ்ச்சியைக் கொடுத்தது. எனக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்த ஒரு இறைவன் எனக்கு
இருக்கிறார். எனக்கு வெற்றி பெற்ற ஒரு இறைவன் இருக்கிறார். "இயேசு வெற்றி
பெற்றவர்!" என்று அறிவிப்பதன் மூலம் என் பாவங்களுக்கு எதிராக நான் போராட
முடியும். எனக்கு ஒரு இறைவன் இருக்கிறார், அவர் கடவுளின்
ஆட்டுக்குட்டியாக, சாத்தானின்
சக்தியையும் பாவத்தையும் வெற்றிகரமாக உடைத்துவிட்டார். இதை நான் விசுவாசத்தில் ஏற்றுக்
கொள்ள முடியும். இது தான் உண்மை. இந்த உண்மை சாத்தானின் ஒவ்வொரு சக்தியையும்
பாவத்தையும் சரணடையச் செய்யும்.
இந்த புத்தகம் நம்முடைய பல்வேறு "பாவ நோய்களை" பற்றியது என்றாலும், நான் அதை மிகுந்த மகிழ்ச்சியுடன் எழுதுகிறேன், ஏனென்றால் நம்முடைய "பாவ நோய்களை" நாம் வைத்திருக்க வேண்டியதில்லை. நாம் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது, நாம் குணமடைவோமா, உண்மையில் நம்மைக் குணப்படுத்தும் மருந்து இருக்கிறதா என்பது நமக்கு தெரியாது. ஆனால் என்ன ஒரு வெற்றிகரமான உண்மை: நம்மை முழுமையாக குணமாக்கும் ஒரு மருந்து இருக்கிறது என்பதை நாம் அறிவதால், நித்தியம் வரை அடையும் கடுமையான நோயின் விளைவுகளிலிருந்து நம்மால் மீள முடியும். இது அவருடைய காயங்களிலிருந்து பாயும் ஆட்டுக்குட்டியின் இரத்ததினால். அதில் வெற்றி இருக்கிறது. "முடிந்தது" என்ற அவரது வார்த்தைகளில் உள்ளன. கல்வாரி தியாகத்தின் மீது உள்ளது. விசுவாசப் போரில் ஈடுபடும் எவரும் இவ்வுண்மைகளை கோரினால், அவர்கள் ஆன்மீக ரீதியில் நலமடைவார்கள். கர்த்தர் தன்னைத் தண்டிக்க அனுமதித்தால், அவன் தனது பாவங்களை வென்று, . "அவருடைய பரிசுத்ததில் பங்குள்ளவர்கள் ஆவார்கள்" (எபி. 12: 10). மேலும், அவன் இயேசுவின் மகிமைக்காக, அவருடைய உருவத்தை பிரதிபலிக்கக்கூடும்.
அடுத்த பக்கம் 3. பாவம்: ஒரு பழங்கால கருத்து அல்லது நமது மோசமான எதிரி?
முன் பக்கம் 1. பாவத்தின் ஊதியங்கள் மற்றும் விசுவாசப் போர்
.
No comments:
Post a Comment