1.பாவத்தின் ஊதியங்கள் மற்றும் விசுவாசப் போர் Trans: Mrs.A.K.
ஒரு
உரையாடல் மற்றும் அதன் விளைவுகள்
இந்த புத்தகத்தின் பின்னால்
ஒரு சிறிய கதை உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு, கிறிஸ்துமஸ் நேரத்தில், நான்
என் ஆன்மீக மகள்களுடன் அமர்ந்திருந்தேன், நாங்கள் எங்கள்
அனுபவங்களை ஒன்றாக பகிர்ந்து கொண்டிருந்தோம். சகோதரிகளில் ஒருவரிடம் ஒரு
வேண்டுகோள் இருந்தது, மற்றவர்களும் அவருடன் சேர்ந்து
கொண்டனர்: "அம்மா பசிலியா அவர்களே, முக்கியமான எங்கள்
சொந்த பாவங்களை எவ்வாறு அகற்றுவது என்று சொல்ல முடியுமா, அவைகள்
விடாபிடியாக நம்மை ஒட்டிக்கொண்டு இருக்கிறது என்று தோன்றுகிறது?"
என் பதில் ஒரு நீண்ட உரையாடலாக மாறியது, ஏனென்றால் ஒன்றன் பின் ஒன்றாக
அவர்கள் தங்கள் பாவங்களை பட்டியல் இட்டார்கள், இயேசுவின்
மீட்பை அவர்கள் எவ்வாறு அனுபவிக்க முடியும் என்பதைக் கேட்க ஆர்வமாக இருந்தார்கள்.
சத்திய ஆவியானவர் எங்கள் மத்தியில் இருந்ததால் மற்றவர்களுக்கு முன்னால் யாரும்
வெட்கப்படவில்லை. ஒவ்வொரு சகோதரியும் இந்த பாவ வியாதியில் இருக்கிறதையும் அவள்
இயேசுவால் குணமடைய வேண்டும் என்றும் அறிந்தனர். எனவே அவர்கள் சரியான மருந்து
மற்றும் தீர்வுக்காக ஏங்கினர்.
"தயவுசெய்து எங்கள் பாவத்திற்கு எதிரான
விசுவாசப் போராட்டத்தைப் பற்றி ஏதாவது எழுதுங்கள் – அவைகள் நடைமுறை வழியில்
எங்களுக்கு உதவக்கூடிய ஒன்றாக இருக்கட்டும்" என்று கேட்டனர். ஆகவே, சில பாவப்போராட்டத்தில் இருக்கிறவர்களுக்கான
தீர்வுகளை பற்றி நான் சில பக்கங்களை எழுதினேன். சில நாட்களுக்குப் பிறகு, என் மகள்கள் இது அவர்களுக்கு மிகவும் உதவியது என்று சொன்னார்கள்.
இது பாவத்தால் ஏற்படும் வேதனையிலிருந்து விடுதலைப் பெற வழி
தேடும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். எனவே சில பக்கங்கள் கூடுதலாக
சேர்க்கப்பட்டு பின்னர் ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டன. எங்கள் இருதயங்களில்
வெற்றிகரமான மகிழ்ச்சியுடன் இதைச் செய்தோம்: "ஆகவே, குமாரன்
உங்களை விடுதலையாக்கினால், மெய்யாகவே விடுதலையாவீர்கள் "
(யோவான் 8: 36).
இந்த புத்தகத்தின் ஐந்தாவது ஜெர்மன் பதிப்பு
இப்போது திருத்தப்பட்ட மற்றும் விரிவாக்கப்பட்ட வடிவத்தில் வெளியிடப்படுகிறது.
விவரிக்கப்பட்டுள்ள முறைகள் - எனக்கும் எனது பல மகள்களுக்கும் மட்டுமல்ல, கானானுக்கு வந்தவர்களுக்கோ
அல்லது வேறு எங்கும் இந்த புத்தகத்தைப் படித்தவர்களுக்கோ பயனுள்ளதாக
நிரூபித்துள்ளன. "ஆன்மீக மருந்தை" விநியோகிக்கும் கூட்டம் மிகவும்
மகிழ்ச்சியான சந்திப்புகளில் ஒன்றாகும் என்று எங்கள் சகோதரிகள் சொல்கிறார்கள். அந்த
சந்திப்பின் மதிய இடை வேளை நேரத்தில் இந்த புத்தகத்தின்
ஒரு அத்தியாயத்தின் மூலம் மக்கள் தங்கள் குறிப்பிட்ட பாவங்களுக்கு ஆலோசனைகளையும்
உதவிகளையும் "ஆன்மீக மருந்துக் கடை"-யில் பெறும்போது, பரலோகத்தில் மகிழ்ச்சி உண்டாகி இருக்கலாம். திருமணமான தம்பதிகள்
ஒருவருக்கொருவர் தங்கள் மருந்தைத் தேர்வுசெய்ய உதவுவதைப் பார்ப்பது அல்லது
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக அதைத் தேர்ந்தெடுப்பதைப் பார்ப்பது ஒரு
அற்புதமான காட்சி.
வெளிநாட்டில் உள்ள ஒரு சகோதரிகளின் தலைவி இந்த
புத்தகத்தைக் கண்டுபிடித்து, அதனுடன் வாழ்ந்த எங்கள் சகோதரிகளின் சாட்சிகளைக்
கேட்டபோது, தனது ஆன்மீக மகள்கள் அனைவருக்கும்,
"மருந்துக் கடை" முழுவதையும் பெற்றதில் அவர் மகிழ்ச்சியடைந்தார்,
இது ஒரு பெரிய புதுப்பிப்பைக் கொண்டுவரும் என்று உணர்ந்தார்.
இந்த புதுப்பித்தல் ஏன் வரக்கூடாது?. தினமும்
இயேசுவையும் அவருடைய இரட்சிப்பையும் நம்பி, நாம் உண்மையிலேயே
விசுவாசப் போரில் போராடும்போது விடுதலையும் மாற்றமும் உண்மையில் நடக்கும் என்பதை
நாங்கள் கண்டறிந்துள்ளோம். அவருக்கு கனத்தையும் நன்றியையும் செலுத்துகிறோம்.
அனுபவத்திலிருந்து ஒரு சிறிய குறிப்பு; இந்த புத்தகம் ஒரே மூச்சாக
படிக்கப்பட வேண்டியதல்ல. குறிப்பிட்ட பாவங்களைப் பற்றிய அத்தியாயங்கள் சில
குறிப்பிட்ட கால கட்டங்களை கடந்து செல்லும்போது நமக்கு உதவுவதற்காக
வடிவமைக்கப்பட்டுள்ளன, அவை நம் குணத்தில் உள்ள
குறிப்பிட்ட பாவ குணங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள வைக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலைகளில்
சிறந்த பயனைப் பெற இந்த புத்தகம் நமக்கு உதவும், ஏனெனில்
இது நாம் எப்படி ஜெபிப்பது என்றும் ஒரு உறுதியான விசுவாச யுத்தத்தை எவ்வாறு
போராடுவது என்பதையும் காட்டுகிறது.
அடுத்த
பக்கம் 2. எனது மிக முக்கியமான கண்டுபிடிப்பு
No comments:
Post a Comment