10.
எந்நேரமும் பிஸியாக Trans: C.J
பிஸியாக!
பிஸியாக இருப்பது நல்லது என்று நாம் சில நேரங்களில் கற்பனை செய்கிறோமா?
அதன்
பின்னால் ஆற்றலும் உழைப்பும் இருக்கின்றனவா?
அல்லது
குறைந்த பட்சம் நாம்
எதையாவது சாதிக்க இது அவசியமா?
இல்லை.
பிஸியாக இருப்பது நம்மை இயேசுவிடமிருந்து பிரிக்கிறது. இது ஒரு பாவம் மற்றும் என்
விசுவாச வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
எல்லாம்
நான் இயேசுவோடு இருக்கிறேனா இல்லையா என்பதைப் பொறுத்தது. இயேசு கூறுகிறார்,
"ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன்தான்
அதிக பலனைத் தருகிறான்"
(யோவான் 15:
5). ஒருபோதும்
அழியாத தெய்வீக வாழ்க்கை, நாம் இயேசு என்ற “ஜீவனோடு” ஒன்றிணைந்தால் மட்டுமே உண்டு. அது நமக்கு
நித்தியத்தில் மட்டுமே கிடைக்கும் கனி.
ஆனால்
இந்த நித்திய கனியைக் கொள்ளையடிக்க சாத்தான் எல்லா முயற்சிகளையும் செய்கிறான்
என்பதை நாம் அறிவோம். நாம் கர்த்தராகிய
இயேசுவோடு ஐக்கியமாக நம்முடைய நாளை செலவழிப்பதில் இருந்து,
என்ன விலை கொடுத்தாவது சாத்தான்
நம்மைத் தடுக்க விரும்புகிறான். ஏனென்றால்
இயேசுவுடனான இந்த ஐக்கியம் நம்மை
பலப்படுத்துகிறது என்பதை அவன்
அறிவான். எல்லா நாமத்திற்கும் மேலான அதிகாரம் கொண்ட, வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராகியவரிடம்
ஐக்கியம் கொண்டுள்ளோம். அவருடைய ஐக்கியத்தின் சக்தி நம்முடையதாக இருப்பதால்,
நம்முடைய
வேலையில் ஆசீர்வாதம் கிடைக்கிறது. மறுபுறம்,
ஏழை
பாவிகளான நாம் இயேசுவிடமிருந்து பிரிந்துவிட்டால், நாம்
பயனற்ற காரியங்களை மட்டுமே செய்ய முடியும். அவை
முதலில் எவ்வளவு நன்றாக தெரிந்தாலும், பதரைப்போல்/உமியைப்போல் வீசி எறியப்படும்.
அதனால்தான்,
நம்முடைய
வேலை நம்மை முழுவதுமாக வசீகரிக்கவும், இதனால்
இயேசுவிடமிருந்து நம்மைப் பிரிக்கவும் சாத்தான் சாத்தியமான எல்லா தந்திரத்தையும் முயற்சிக்கிறான்.
வேலை நம்மைச் சங்கிலியால் கட்டி வைக்கிறது. ஏனென்றால்
வேலை நமக்கு மிகவும் ஆர்வமாகவும்,
நம்
மனித ஆசைகளை பூர்த்திசெய்கிறதாயும்,
மேலும்
நமக்கு அதில் ஒரு நிறைவைக்
காணவும் செய்கிறது. வேலை நமது லட்சியத்தைத்
தூண்டும். நாம் பல விஷயங்களை அடையவும், வெற்றிகளையும்
அங்கீகாரத்தையும் பெற விரும்புகிறோம். சிலர் வேலை செய்ய விரும்புகிறார்கள்.
அவர்கள் தங்களால் என்ன சாதிக்க முடியும் என்பதைப்
பார்க்க விரும்புகிறார்கள். அல்லது வேலை என்பது ஒரு தப்பிக்கும் போக்கு கொண்ட,
நம்
மனசாட்சியைக் கெடுக்கும் ஒரு வழியாகும், ஏனென்றால்
நம் வாழ்க்கையை சரியாக வைக்கவில்லை.
இத்தகைய காலகட்டங்களில் நம்முடைய ஜெப நேரங்கள் தாங்க முடியாதவைகளாக ஆகிறது. சிலர் பெரிய
வேலைகள் செய்ய பைத்தியம் போல் அலைகிறார்கள். அவர்கள் கட்டுண்டவர்கள், எனவே
அவர்கள் வேலை செய்யும் போது ஜெபிக்க முடியாது.
ஆகவே,
சாத்தான்
பல்வேறு திசைகளிலிருந்து நம்மிடம் வந்து, நம்மை
பிஸியாகவும்,
இயேசு
இல்லாத வாழ்க்கையிலும் திருப்ப
முயற்சிக்கிறான். ஏனென்றால் சாத்தான்
தீங்கிழைக்கும் அமைதியின்மையின் ஆவி. ஆயினும், இயேசு
சமாதான இளவரசர். அவருடன் அவருடைய வேலையைச்
செய்கிறவன் நிம்மதியாக இருக்கிறான், அவசரப்படுவதில்லை.
அப்போது நம் கடின உழைப்பு ஒரு பைத்தியக்கார ஓட்டம் அல்ல. நாம்
வேலை செய்வதற்கு அடிமைப்படவுமில்லை,
அதால்
இயக்கப்படுவதுமில்லை. ஆனால்
அமைதியான ஜெப நேரங்களில் இருந்து நம் பலத்தை
ஈர்த்து நாம் கடவுளோடு இணைந்து செயல்படுகிறோம்.
இது தெய்வீக,
வைராக்கியம்
மற்றும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை.
ஆனால்,
இயேசுவிடமிருந்து
பிரிந்திருக்கும்போது மட்டுமே நாம் மகிழ்ச்சியடையவில்லை என்பதை நாம் அறிந்திருந்தாலும்,
பொதுவாக
நம்முடைய வேலையில் நம்மை பிணைக்கும் சங்கிலிகள் உள்ளன. பகலில் நாம் இயேசுவுடனான ஐக்கியத்தை
இழக்கிறோம் என்று மீண்டும் மீண்டும் புலம்ப வேண்டும். உண்மையில்,
நாம்
நம்முடைய பல்வேறு பணிகளில் ஈடுபடும்போது, அவரை
மணிக்கணக்கில் மறக்க முனைகிறோம். ஆனால் நம் வேலையில் பிஸியாக இருப்பது என்பதை இனி
நம் வாழ்வில் பொறுத்துக்கொள்ள முடியாது. இது வெறுமனே பாதிப்பில்லாத "விரைந்து
செல்லல்" அல்லது "வேலையில் தன்னை மெய் மறக்க செய்வது" என்பது அல்ல,
மாறாக
“பிஸி” என்பது நமக்கு கடுமையான தண்டனையைத் தரும் ஒரு பாவமாகும். இயேசுவின்
வார்த்தைகளை தனது பிஸியான வேலையில் தீவிரமாகப் எடுத்து கொள்பவன் யார்?
"ஒருவன்
என்னுள் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப் போல அவன் எறியுண்டு
உலர்ந்து போவான். அப்படிப்பட்டவைகளை சேர்த்து அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்து
போம்."
(யோவான் 15:
6). "வெளியே
எறிந்து போடு" என்பது பிஸியின் கதி. அவர்கள் இயேசுவின் சமுகத்திலிருந்தும் மற்றும்
அவருடைய ராஜ்யத்தின்றும் வெளியேற்றப்படுவார்கள். ஏனென்றால்
அவர்கள் தங்களுக்கு கடவுளிடம் உள்ள தனிப்பட்ட அன்பிலும், அவருடைய பார்வையிலும்
வேலை செய்யவில்லை. அவர்களது படைப்புகள் எரிக்கப்படுவது மட்டுமல்லாமல்,
அவர்களும்
எரிந்து போவார்கள். ஆகவே, என்ன விலை
கொடுத்தாவது நாம் பிஸியாக இருப்பதில் இருந்து மீட்கப்பட வேண்டும்.
ஆனால்
நாம் எப்படி மீட்கப்படுவது? "அவரிடத்தில்
நிலைத்திருத்தல்", எல்லாவற்றையும்
இயேசுவோடு சேர்ந்து செய்வது என்பதை பழக்கத்தில் கொள்ள வேண்டும். இயேசு என்ற பெயரை
மீண்டும் மீண்டும் நம் இதயத்தில் சொல்ல பயிற்சி செய்ய வேண்டும். நாம் பணிபுரியும்
போது,
"உமக்காக!
உமக்காக!" என்று சொல்லி வேலை செய்ய பழக வேண்டும். தூங்கச் செல்வதற்கு முன்,
பகலில்
நாம் இயேசுவோடு இருந்தோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வோம். இயேசுவைப் பற்றி
சிந்திக்க நமக்கு அறிவுரை கூற கடவுளுடைய ஆவியானவரைக் கேட்போம். நமது காலை ஜெபத்தின்
போது இந்த கோரிக்கையை மீண்டும் அவர் முன் வைப்போம் நாம் வேலை செய்யு முன்.
குறிப்பாக பிஸி என்ற பாவத்தின் கீழ் நாம் கஷ்டப்படுகிறோம் என்றால்,
வேலையில்
இருக்கும் போது ஒவ்வொரு மணி நேரமும் ஒரு ஜெபத்தைப் செய்ய நமக்கு எப்படி நினைவூட்டப்படலாம்
என்பதை அவர் நமக்குக் காட்ட அனுமதிக்க வேண்டும்.
பல
தோல்விகளை நாம் அனுபவித்தாலும், "கிறிஸ்துவில்
நிலைத்திருப்பது" என்பதை இறைவனிடம் மன்றாடுவதை நாம் நிறுத்தக்கூடாது. ஒவ்வொரு
முறையும் வேலையில் அவருடனான உள் தொடர்பை நாம் இழந்துவிட்டால்,
ஒரு
நாளைக்கு நூறு முறை கூட என்றாலும், அவருடனான நமது பிணைப்பை
புதிதாக இணைக்க முயற்சிக்க வேண்டும். நம்முடைய வேலையின் பலன் சதா காலத்திற்கும்
இதைப் பொறுத்து உள்ளது. விசுவாசத்தின் ஒரு திட்டவட்டமான இலக்கை நாம் நமக்காக
அமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் இயேசுவிடம் கேட்போம்:
ஆழமாக ஆழமாக
நான் உம்மில் மூழ்கி விட வேண்டும்
இனி உம்மை
இழக்க முடியாது. என்னை விடுவிக்கவும்
உம்
இரத்தத்தின் சக்தி மூலம் என் வேலையாகிய அடிமைத்தனத்திலிருந்து!
கடவுள்
பதிலளிப்பார்,
இயேசு
நம்மை வேலையில் பிணைக்கும் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கும் ஒரு மீட்பர் என்பதை
நாம் அனுபவிப்போம். பின்னர் நாம் அவருக்குக் கட்டுப்பட்டு அவருடைய மகிமைக்கு
நித்திய கனிகளைக் கொடுப்போம்.
இயேசுவே நீரே
என் எல்லாம்!
நான் உம்முடன்
பேசுவேன்,
உமக்காக
வேலை செய்வேன்!
நான்
உம்முடன் சேர்ந்து என் அனைத்து முடிவுகளையும் திட்டமிடவும்,
கருத்தில்
கொள்ளவும் விரும்புகிறேன்
நீர் வெளியேற்ற பற்றதாக இல்லாமல் இருக்க, நீர் அல்லாது எதுவும் செய்யப்பட மாட்டாது
வேலையோ,
சுமையோ,
மற்ற
ஆர்வமோ,
இல்லை
மகிழ்ச்சியோ எதுவுமே நம்மை பிரிக்காதபடி என்னை உம்முடன் இறுக்கமாகக் அணைத்து
கொள்ளும்.
நான்
என்றென்றும் உம்முடைய பரிசுத்த சமுகத்தில் வாழட்டும்,
ஏனென்றால்,
நீர் இங்கே இருக்கிறீர்!
அடுத்த
பாடம்
முன்பாடம் 9. எளிதில் கோபப்படுவது: எரிச்சல்
No comments:
Post a Comment